குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973 (CrPC) – பிரிவு வாரியான தலைப்புகள்
Law Awareness 06 Mar 2026
← Back to News
Link copied successfully.

குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973 (CrPC) – பிரிவு வாரியான தலைப்புகள்

குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973 (CrPC) – பிரிவு வாரியான தலைப்புகள் 1️⃣ குற்றவியல் நீதிமன்றங்களின் அமைப்பும் அவற்றின் அதிகாரங்களும் (Constitution of Criminal Courts and their Powers) – பிரிவு 6 முதல் 35 2️⃣ நபர்களை கைது செய்தல் (Arrest of Persons) – பிரிவு 41 முதல் 60 3️⃣ ஆஜராவதை கட்டாயப்படுத்தும் நீதிமுறை கட்டளைகள் (Process to Compel Appearance) – பிரிவு 61 முதல் 69 4️⃣ கைது செய்வதற்கான பிடியாணை (Warrant of Arrest) – பிரிவு 70 முதல் 81 5️⃣ பகிரங்க அறிவிப்பு மற்றும் ஜப்தி (Proclamation and Attachment) – பிரிவு 82 முதல் 86 6️⃣ பொருட்களை தாக்கல் செய்வதற்கான அழைப்பாணை (Summons to Produce) – பிரிவு 91 முதல் 92 7️⃣ பொருட்களை தாக்கல் செய்வதற்கான சோதனை பிடியாணை (Search Warrant) – பிரிவு 93 முதல் 101 8️⃣ அமைதியை காக்கவும் நன்னடத்தையை உறுதி செய்யவும் பிணையம் (Security for Keeping the Peace and Good Behaviour) – பிரிவு 106 முதல் 124 9️⃣ மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கான வாழ்க்கைப் பொருளுதவி உத்தரவு (Order for Maintenance of Wives, Children and Parents) – பிரிவு 125 முதல் 128 🔟 பொது ஒழுங்கு மற்றும் அமைதியை பேணுதல் (Maintenance of Public Order and Tranquility) – பிரிவு 129 முதல் 148 1️⃣1️⃣ சட்டவிரோதமான கூட்டங்கள் (Unlawful Assemblies) – பிரிவு 129 முதல் 132 1️⃣2️⃣ பொதுத் தொல்லைகள் (Public Nuisance) – பிரிவு 133 முதல் 143 1️⃣3️⃣ தொல்லை அல்லது எதிர்நோக்கப்பட்ட அபாயம் தொடர்பான அவசர உத்தரவு (Urgent Cases of Nuisance or Apprehended Danger) – பிரிவு 144 1️⃣4️⃣ அசையாச் சொத்துகள் தொடர்பான தகராறுகள் (Disputes as to Immovable Property) – பிரிவு 145 முதல் 148 1️⃣5️⃣ காவல் துறையினரின் தடுப்பு நடவடிக்கைகள் (Preventive Action of the Police) – பிரிவு 149 முதல் 153 1️⃣6️⃣ காவல்துறைக்கு தகவல் அளித்தலும், விசாரணை அதிகாரங்களும் (Information to the Police and their Powers to Investigate) – பிரிவு 154 முதல் 176 1️⃣7️⃣ விசாரணை மற்றும் வழக்கு விசாரணைகளில் நீதிமன்ற அதிகார வரம்பு (Jurisdiction of Criminal Courts in Inquiries and Trials) – பிரிவு 177 முதல் 189 1️⃣8️⃣ நடவடிக்கைகளை தொடங்க தேவையான நிபந்தனைகள் (Conditions Requisite for Initiation of Proceedings) – பிரிவு 190 முதல் 199 1️⃣9️⃣ மாஜிஸ்ட்ரேட்களிடம் குற்ற மனுக்கள் தாக்கல் செய்தல் (Complaints to Magistrates) – பிரிவு 200 முதல் 203 2️⃣0️⃣ மாஜிஸ்ட்ரேட்களின் முன்பு நடவடிக்கைகள் தொடங்குதல் (Commencement of Proceedings before Magistrates) – பிரிவு 204 முதல் 210 2️⃣1️⃣ குற்றச்சாட்டுகளின் வடிவம் (Form of Charges) – பிரிவு 211 முதல் 217 2️⃣2️⃣ குற்றச்சாட்டுகளின் சேர்க்கை (Joinder of Charges) – பிரிவு 218 முதல் 224 2️⃣3️⃣ செஷன்ஸ் நீதிமன்றத்தின் முன்பு வழக்கு விசாரணை (Trial before a Court of Session) – பிரிவு 225 முதல் 237 2️⃣4️⃣ மாஜிஸ்ட்ரேட்கள் முன்பு பிடியாணை வழக்குகள் விசாரணை (Trial of Warrant Cases by Magistrates) – பிரிவு 238 முதல் 250 2️⃣5️⃣ மாஜிஸ்ட்ரேட்கள் முன்பு அழைப்பாணை வழக்குகள் விசாரணை (Trial of Summons Cases by Magistrates) – பிரிவு 251 முதல் 259 2️⃣6️⃣ சுருக்குமுறை விசாரணை (Summary Trial) – பிரிவு 260 முதல் 265 2️⃣7️⃣ சாட்சியம் எடுக்கும் மற்றும் பதிவு செய்யும் நடைமுறை (Mode of Taking and Recording Evidence) – பிரிவு 272 முதல் 283 2️⃣8️⃣ சாட்சிகளை விசாரிக்க ஆணை / கமிஷன் வழங்குதல் (Commissions for the Examination of Witnesses) – பிரிவு 284 முதல் 290 2️⃣9️⃣ சாட்சியங்கள் தொடர்பான சிறப்பு விதிகள் (Special Rules of Evidence) – பிரிவு 291 முதல் 299 3️⃣0️⃣ விசாரணைகள் மற்றும் வழக்கு விசாரணைகள் குறித்த பொதுவான விதிகள் (General Provisions as to Inquiries and Trials) – பிரிவு 300 முதல் 327 3️⃣1️⃣ மனநலம் பாதிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்குள்ளான நபர்கள் (Provisions as to Accused Persons of Unsound Mind) – பிரிவு 328 முதல் 339 3️⃣2️⃣ தீர்ப்பு (Judgement) – பிரிவு 353 முதல் 365 3️⃣3️⃣ மேல்முறையீடுகள் (Appeals) – பிரிவு 372 முதல் 394 3️⃣4️⃣ மேல்முடிவிற்கு அனுப்புதல் மற்றும் சீராய்வு (Reference and Revision) – பிரிவு 395 முதல் 405 3️⃣5️⃣ குற்ற வழக்குகளை மாற்றுதல் (Transfer of Criminal Cases) – பிரிவு 406 முதல் 412 3️⃣6️⃣ தண்டனைகள் நிறைவேற்றுதல், இடைநிறுத்தம், குறைத்தல் மற்றும் மாற்றுதல் (Execution, Suspension, Remission and Commutation of Sentences) – பிரிவு 413 முதல் 435 3️⃣7️⃣ பிணை மற்றும் பிணைப்பத்திரங்கள் தொடர்பான விதிகள் (Provisions as to Bail and Bonds) – பிரிவு 436 முதல் 450 3️⃣8️⃣ சொத்துக்களின் மேலாண்மை மற்றும் முடிவு (Disposal of Property) – பிரிவு 451 முதல் 459 3️⃣9️⃣ முறைகேடான நடவடிக்கைகள் (Irregular Proceedings) – பிரிவு 460 முதல் 466 4️⃣0️⃣ சில குற்றங்களில் நீதிமன்றம் கவனத்தில் எடுக்கும் கால வரம்பு (Limitation for Taking Cognizance of Certain Offences) – பிரிவு 467 முதல் 473
Chat with us