வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம் 2025 – முக்கிய சிறப்புகள்…!
இனி 2 மாத அட்வான்ஸ் போதும்!
1️⃣ புதிய வீட்டு வாடகை சட்டத்தின் நோக்கம்
வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம், 2025ன் மூலம், வீடுகளை வாடகைக்கு விடுவோருக்கும், வாடகைக்கு குடியேறுவோருக்கும் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்தச் சட்டம் இரு தரப்பினருக்கும் சமநிலை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
2️⃣ இனி 2 மாத அட்வான்ஸ் மட்டும்
புதிய சட்டத்தின் படி, குடியிருப்பு வீடுகளுக்கு 2 மாத வாடகைக்கு மேல் முன்பணம் (Advance) வசூலிக்கக் கூடாது.
வணிகக் கட்டடங்களுக்கு மட்டும் 6 மாத வாடகை வரை முன்பணம் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
3️⃣ வாடகை ஒப்பந்தம் பதிவு கட்டாயம்
வீட்டை வாடகைக்கு விடும் உரிமையாளர், வாடகை ஒப்பந்தத்தை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.
முன்பு சாதாரண பாண்டு பேப்பரில் எழுதுவது போதுமானதாக இருந்தது. ஆனால், புதிய சட்டத்தின் படி 2 மாதங்களுக்குள் ஒப்பந்தம் பதிவு செய்யப்பட வேண்டும்.
4️⃣ ஒப்பந்தம் பதிவு செய்யாவிட்டால் அபராதம்
வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்யத் தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என சட்டம் கூறுகிறது.
5️⃣ ஆதார் அடிப்படையிலான மின்னணு பதிவு
வாடகை ஒப்பந்தங்கள் ஆதார் அடிப்படையிலான மின்னணு சரிபார்ப்பு முறையில் (Online Registration) பதிவு செய்யப்பட வேண்டும்.
கைப்பட எழுதப்பட்ட, கையெழுத்திட்ட ஒப்பந்தங்களுக்கு இனி அனுமதி இல்லை.
6️⃣ வாடகை உயர்த்துவதற்கான கட்டுப்பாடுகள்
வாடகைதாரர் குடியேறிய பிறகு, 12 மாதங்கள் கழித்தே வாடகையை உயர்த்த முடியும்.
மேலும், வாடகை உயர்த்த விரும்பினால், குறைந்தது 2 மாதங்கள் முன்பே எழுத்துப்பூர்வ நோட்டீஸ் வழங்க வேண்டும்.
7️⃣ வீட்டில் பழுது ஏற்பட்டால் உரிமையாளரின் பொறுப்பு
வாடகை வீட்டில் பழுது ஏற்பட்டால், உரிமையாளர் 30 நாட்களுக்குள் சரி செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்யத் தவறினால், வாடகைதாரர்கள் தாமாக பழுது சரி செய்து, அதன் செலவை வாடகை தொகையில் கழித்துக் கொள்ளலாம்.
8️⃣ உரிமையாளர் விருப்பப்படி வீட்டில் நுழைய முடியாது
வாடகை வீட்டை சரிபார்க்க, உரிமையாளர் நினைக்கும் போதெல்லாம் நுழைய முடியாது.
24 மணி நேரத்திற்கு முன்பாக எழுத்துப்பூர்வ அனுமதி அளித்த பின்னரே வீட்டிற்குள் நுழைய வேண்டும்.
9️⃣ காரணமின்றி காலி செய்ய வற்புறுத்த தடை
வாடகை செலுத்தாதது, வீட்டுக்கு சேதம் விளைவித்தது போன்ற சட்டத்தில் குறிப்பிடப்பட்ட காரணங்கள் இல்லாமல்,
வாடகைதாரரை காலி செய்ய வற்புறுத்தக் கூடாது என சட்டம் தடை விதிக்கிறது.
🔟 வாடகை தகராறுகளுக்கு விரைவு தீர்வு
வாடகை தகராறு, வீடு காலி செய்யும் வழக்கு போன்றவை 2 மாதங்களுக்குள் தீர்க்கப்பட வேண்டும்.
இதற்காக சிறப்பு தீர்ப்பாயம் (Special Tribunal) அமைக்கப்பட்டு, வழக்குகள் விரைந்து முடிக்கப்படும்.
1️⃣1️⃣ டிடிஎஸ் (TDS) தொடர்பான புதிய விதி
மாத வாடகை ரூ.50,000க்கு மேல் இருந்தால், டிடிஎஸ் பிடித்தம் கட்டாயம்.
சிறிய மற்றும் நடுத்தர வாடகை வீட்டுகளுக்கு, டிடிஎஸ் விலக்கு வரம்பு ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
1️⃣2️⃣ வாடகை ஒப்பந்தம் பதிவு செய்வது எப்படி?
வாடகைதாரரும், உரிமையாளரும் சேர்ந்து ஒப்பந்தத்தை தயாரிக்க வேண்டும்.
அதை சார் பதிவாளர் அலுவலகத்தில் அல்லது இணைய வழியில் பதிவு செய்யலாம்.
இதற்கு ஆதார் அல்லது பான் அட்டை ஏதேனும் ஒன்று போதுமானது.
1️⃣3️⃣ வாடகைதாரர்களுக்கு கிடைக்கும் நன்மைகள்
குறைவான முன்பணம், திடீர் வாடகை உயர்வு இல்லை, சட்டப் பாதுகாப்பு எளிது,
பழுதுபார்ப்பு உரிமை மற்றும் விரைவு நீதித் தீர்வு ஆகியவை வாடகைதாரர்களுக்கு கிடைக்கும் முக்கிய நன்மைகளாகும்.
1️⃣4️⃣ வீட்டு உரிமையாளர்களுக்கு கிடைக்கும் நன்மைகள்
வரி நன்மைகள், வாடகை வசூல் எளிதாகும், வலுவான சட்ட ஆவணம் உருவாகும்,
தகராறுகளுக்கு விரைவில் தீர்வு, மோசடிகளைத் தடுக்க முடியும் என்பவை உரிமையாளர்களுக்கு கிடைக்கும் பலன்களாகும்.