Inter-caste Marriage (கலப்பு திருமணம்)
எந்த ஜாதி அல்லது மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும், இந்திய குடிமக்கள் அனைவருக்கும் பெரும்பாலான சட்டங்கள் ஒன்றாகவே இருக்கும். உதாரணமாக குடியுரிமை சட்டம், வருமானவரி சட்டம், சொத்துரிமை மாற்றுச் சட்டம், இந்திய ஒப்பந்த சட்டம், காவல்துறை சட்டங்கள், இந்திய சாட்சிய சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் போன்றவை. அதற்கு மாறாக வாரிசுரிமை சட்டம், திருமணச் சட்டங்கள் போன்றவை அவரவர் சார்ந்துள்ள மதம் அல்லது சமையத்திற்கு ஏற்றார் போல் மாறுபடும். திருமணத்தை பொறுத்தவரை இந்து என்றால் இந்து திருமணச் சட்டமும், கிறிஸ்தவர்கள் என்றால் சிறப்புச் சட்டமும், முஸ்லிம்கள் என்றால் முகமதிய சட்டங்களும் பொருந்தும். அதேபோல் குடும்ப சொத்தில் வாரிசு கோருவதற்கு இந்து என்றால் இந்து வாரிசுரிமை சட்டமும், கிறிஸ்தவர்கள் என்றால் இந்திய வாரிசுரிமை சட்டமும், முஸ்லிம்கள் என்றால், இஸ்லாமிய சட்டங்களும் பொருந்தும் இந்து, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதங்களிலேயே பல்வேறு பிரிவுகள் (ஜாதிகள்) உள்ளது. எனவே கலப்பு திருமணத்தை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒரே மதத்தை சேர்ந்த வேறுபட்ட இரண்டு ஜாதியினர் செய்து கொள்ளும் கலப்பு திருமணம் ஒரு வகை. ஒரு மதத்தை சார்ந்தவர் மற்றொரு மதத்தை சார்ந்தவரை மணம் செய்து கொள்ளும் கலப்பு திருமணம் இரண்டாவது வகை.
View →